×

இயக்குனர் மீது பாலியல் புகார்: கவர்னருடன் நடிகை சந்திப்பு

தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். இந்தி, தெலுங்கு மொழி படங்களிலும்  நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட்டில் பிரபல இயக்குனர். மத்திய அரசை தொடர்ந்து டிவிட்டரில் அனுராக் காஷ்யப் விமர்சித்து வந்தார். இதையடுத்து அவரது மகளுக்கு பலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்தவில்லை. இந்நிலையில்தான் அவர் மீது பாலியல் தொந்தரவு அளித்ததாக பாயல் கோஷ் குற்றச்சாட்டு கூறினார். இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பாயல் கோஷ் சந்தித்து பேசினார். அப்போது அனுராக் காஷ்யப் மீதான வழக்கு தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். மேலும் தற்போதைய சூழல் குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Actress ,governor ,
× RELATED நடிகை பாயல் கோஷ் கொடுத்த பாலியல் புகார்: பாலிவுட் இயக்குநரிடம் விசாரணை