×

வெற்றி மாறனின் 4 படங்கள்

அசுரன் படத்தின் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறனுக்கு கோலிவுட்டில் மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து 4 படங்கள் இயக்க அவர் தேர்வாகியுள்ளார். இதில் ஒரு படத்தில் சூர்யா நடிக்கிறார். படத்துக்கு வாடிவாசல் என தலைப்பு வைத்துள்ளனர். மற்றொரு படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். 4வது படம்தான் யாரும் எதிர்பாராதது. அதாவது, விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க முன்பே வெற்றிமாறன் பேசியிருந்தார். அந்த படம்தான் அவரது 4வது படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து வெற்றிமாறன் படங்களுக்கு இசையமைப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவர் இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, இந்த புரொஜெக்ட்டை பற்றி பேசியுள்ளார். ‘விஜய், வெற்றிமாறன் இணையும் படம், மெர்சலாக இருக்கும். அதே சமயம் இது உடனே சாத்தியம் கிடையாது. அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்கலாம். அல்லது அதற்கு அடுத்த வருடம் துவங்கலாம். 2 வருடத்துக்குள் இந்த புரொஜெக்ட் டேக்ஆஃப் ஆகும்’ என ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

Tags : Victory Maran ,
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...