×

ரசிகருக்காக வருத்தப்பட்ட லட்சுமி

எப்படியாவது தமிழில் மீண்டும் துண்டு போட்டு இடம் பிடித்துவிட வேண்டும் என்று போட்டோசெஷன் நடத்தி, அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார் லட்சுமி மேனன். அவரது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஒரு ரசிகர், ‘மீண்டும் எதற்கு நடிக்க வருகிறீர்கள்? வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு, இனிமையான குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகுங்கள். நீங்கள் ஒரு தேவதை’ என்று வர்ணித்து கமெண்ட் பதிவு செய்திருந்தார். அதை பார்த்து கடுப்பான லட்சுமி மேனன், ‘மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவது என் விருப்பம். தேவதை என்று சொல்கிறீர்கள். பிறகு ஏன் நான் கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாக வேண்டும்? உங்களை நினைத்து பரிதாபப்படுகிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

Tags : Lakshmi ,
× RELATED திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா...