×

தர்மபிரபு 2ம் பாகம் உருவாகிறது

கடந்த ஆண்டு யோகி பாபு, ஜனனி அய்யர், மேக்னா நாயுடு, ராதாரவி, ரேகா நடிப்பில் ரிலீசான படம், தர்மபிரபு. முத்துக்குமரன் இயக்கினார். தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து முத்துக்குமரன் கூறுகையில், ‘தற்போது தர்மபிரபு 2ம் பாகத்துக்கான கதையை எழுதி வருகிறேன். இதுபற்றி யோகி பாபுவிடம் பேசியுள்ளேன். ஏற்கனவே எனது இயக்கத்தில் விமல், வரலட்சுமி நடித்த கன்னி ராசி என்ற படம் விரைவில் திரைக்கு வரும் என்று தெரிகிறது’ என்றார்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற 2 பேர் கைது