×

காஜல் சம்பள ரகசியம்

தனது காதல் திருமணம் குறித்த வதந்திகள் அடங்கியதால் மகிழ்ச்சி அடைந்துள்ள காஜல் அகர்வால், தொடர்ந்து சினிமாவில் நடிக்க விரும்புவதாக சொல்லி வருகிறார். நடிக்க வந்து பல வருடங்களாகி விட்டாலும், மேலும் சில வருடங்கள் சினிமாவில் நீடிக்க ேவண்டும் என்பது அவரது எண்ணம். அதற்காக சில ஹீரோக்களுக்கு தூது அனுப்பி, அவர்களுடன் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளாராம். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப சம்பளத்தில் தள்ளுபடி செய்யவும் தயாராக இருக்கிறாராம்.

சம்பள விவகாரம் குறித்து ஏன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று சிலர் கேட்டபோது, அப்படி வெளிப்படையாக அறிவிக்க முடியாது என்றும், தன்னை தேடி வரும் வாய்ப்புக்கு ஏற்ப, ஹீரோ மற்றும் இயக்குனரை பொறுத்து சம்பளத்தில் தள்ளுபடி செய்ய தயாராக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். காஜல் கடைபிடிக்கும் பாலிசியை மேலும் சில நடிகைகள் பின்பற்றுகிறார்களாம். சம்பளம் குறைக்கிறேன் என்று வெளிப்படையாக சொன்னால், பிறகு எல்லா படங்களுக்கும் சம்பளம் குறைந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்களாம்.

Tags : Kajal ,
× RELATED அக்டோபர் 30ம் தேதி மும்பையில் எனக்கு...