×

நாய்களுடன் ஆண்ட்ரியா சண்டை

உலகிலேயே அதிக மழை பெய்யும் இடம், மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி. இங்கு ஆனந்தி நடித்த கயல் படத்தின் ஒரு பாடல் காட்சியை இயக்குனர் பிரபு சாலமன் படமாக்கினார். தற்போது அங்கு 45 நாட்கள் தங்கி முழு படத்தையும் உருவாக்கியதாக சொன்ன இயக்குனர் அழகு கார்த்திக், படத்துக்கு நோ என்ட்ரி என்று பெயரிட்டுள்ளார். இளம் காதல் தம்பதிகளை 15 வேட்டை நாய்கள் திடீரென்று தாக்குகின்றன.

யானையையே வேட்டையாடி ஜெயிக்கும் வல்லமை படைத்த நாய்கள், தம்பதிகளை என்ன செய்கிறது என்பது கதை. 15 நாய்களுடன் மோதும் காட்சியில் ஆண்ட்ரியா உயிரை பணயம் வைத்து நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களுக்கு பயிற்சி அளித்து நடிக்க வைத்தார்களாம். விக்ரம் பிரபு ஜோடியாக வாகா படத்தில் நடித்திருந்த ரன்யா ராவ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்துள்ளார்.

Tags : Andrea ,
× RELATED நோய் பாதித்த நாய்களால் அச்சம்