×

மொட்டை போட்ட சிரஞ்சீவி

கொரட்டாலா சிவா எழுதி இயக்கும் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இது சிரஞ்சீவி நடிப்பில் அவரது மகன் ராம்சரண் தயாரிக்கும் படம். இதில் கவுரவ வேடத்திலும் ராம்சரண் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க முதலில் தேர்வான ஹீரோயின் திரிஷா. படக்குழுவினருடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அந்த வேடத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமானார். இப்போது அவருக்கும் ஒரு இந்தி பட வாய்ப்பு வந்திருப்பதாகவும் அதனால் இதில் நடிப்பது கேள்விக்குறிதான் என்றும் பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையே தலைக்கு மொட்டை அடித்து புதிய கெட்அப்புக்கு சிரஞ்சீவி மாறியுள்ளார்.

ஆச்சார்யா படத்தில் சில காட்சிகளில் அவர் இதுபோல் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சிரஞ்சீவியின் மற்றொரு படத்துக்குதான் இந்த கெட்அப் என்றும் கூறப்படுகிறது. அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கிறார். வேதாளம் படத்தில் பிளாஷ்பேக்கில் குட்டி தலைமுடியுடன்தான் அஜித் தோன்றுவார். அதேபோல் தலைமுடியை ஷாட் செய்து இதில் நடிக்கவே சிரஞ்சீவி மொட்டை அடித்திருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Chiranjeevi ,
× RELATED சிரஞ்சீவி மருமகளுடன் சேர்ந்து புதிய பிசினஸ் தொடங்கினார் சமந்தா