×

கொரோனாவிலிருந்து மீண்டார் பிளாஸ்மா தானம் செய்கிறார் ராஜமவுலி

பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. சில தினங்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரிந்தது. அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பாசிட்டிவ் என பரிசோதனையில் தெரிந்தது. இதையடுத்து 2 வாரம் வீட்டிலேயே அவர்கள் சிகிச்சை பெற்றனர். தற்போது ராஜமவுலியும் அவரது குடும்பத்தாரும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இது பற்றி ராஜமவுலி கூறும்போது, ‘சமீபத்தில் எடுத்த டெஸ்ட்டில் நெகட்டிவ் என வந்துள்ளது. பிளாஸ்மா தானம் செய்ய நானும் குடும்பத்தாரும் ஆர்வத்துடன் இருக்கிறோம். ஓரிரு வாரம் கழித்து இதற்காக தொடர்புகொள்கிறோம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்’ என்றார்.

Tags : Rajamavuli ,Corona ,
× RELATED ஜப்பானில் 4 பேருக்கு கொரோனா 3.0 :...