×

ஜான்வி கபூர் படத்துக்கு இந்திய விமானப்படை எதிர்ப்பு

கரண் ஜோஹரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் ‘குஞ்சன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்’. இப்படம் இந்திய விமானப்படையின் முதல் பெண் விமான ஓட்டியான குஞ்சன் சக்ஸேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் குஞ்சன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை தேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்த படம் ஓடிடியில் நேற்று வெளியானது. இதில் வரும் சில காட்சிகளும், வசனங்களும் இந்திய விமானப்படைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், கரண் ஜோஹர், சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் ஆகியவற்றுக்கு இந்திய விமானப் படை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில் கூறியிருப்பது: இந்த படத்தில் சில காட்சிகளில் இந்திய விமானப்படை பணி சூழல் குறித்து, குறிப்பாக விமானப்படையில் உள்ள பெண்கள் குறித்தும் தவறான பிம்பத்தை ஏற்படுத்துகிறது. இந்திய விமானப் படை எப்போதும் பாலின பேதமின்றி, ஆண் மற்றும் பெண் அதிகாரிகளுக்கு சம உரிமை வழங்கி வருகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பு நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. எனினும் தயாரிப்பு நிறுவனம் அது போன்ற எந்த காட்சிகளையும் நீக்காமல் திரைப்படத்துக்கு முன்னால் மறுப்பு ஒன்றை சேர்த்துள்ளது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : protests ,Indian Air Force ,Janvi Kapoor ,
× RELATED இந்திய விமானப் படைக்கு மேலும்...