×

கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் போக்கும் ரோபோ சங்கர்

காமெடி நடிகர் ரோபோ சங்கர் கூறியதாவது: கொரோனாவால் மக்கள் படும் அவஸ்தைகளை பார்த்து வேதனை அடைந்தேன். கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிக்சை பெறுகிறவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் என்னை பாதித்தது. அவர்கள் சிகிச்சை பெறும் இடத்திற்கே சென்று அவர்களை சந்தோஷப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க முடிவு செய்தேன்.ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று கலெக்டரை சந்தித்து அனுமதி பெறுவேன். அவர்கள் கூறும் சிகிச்சை மையங்களுக்கு சென்று நோயாளிகளை சந்திப்பேன். மிமிக்ரி, காமெடி என என்னிடம் இருக்கும் நகைச்சுவை கலையை கொண்டு அவர்களை மகிழ்விப்பேன். 

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும். சிகிச்சை பெறுகிறவர்கள் சமூக இடைவெளிவிட்டு முக கவசம், கையுறை அணிந்து அமர்ந்திருப்பார்கள். நானும் உரிய இடைவெளி விட்டு நின்று நிகழ்ச்சியை நடத்துவேன். இந்த பணியை தொண்டு உள்ளத்துடன் செய்து வருகிறேன். தஞ்சை, திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு சென்றேன். அடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு செல்கிறேன்.

Tags : Robo Shankar ,corona patients ,
× RELATED கொரோனா நோயாளிகள் மற்றும்...