×

6 மில்லியன் டிஸ்லைக்: அலியா பட் படம் இப்படியொரு சாதனை

லைக்குகள் அதிகம் பெற்று ஒரு படத்தின் டிரெய்லர் சாதனை புரிவதுதான் சினிமாவில் பெருமையாக பேசப்பட்டு வந்தது. இப்போது டிஸ்லைக்குகள் அதிகம் பெற்று ஒரு படம் சாதித்துள்ளது. பாலிவுட்டில் சஞ்சய் தத், அலியா பட் நடித்துள்ள படம் சடக் 2. இந்த படத்தை மகேஷ் பட் தயாரித்து, இயக்கியுள்ளார். இவர் படத்தின் நாயகி அலியா பட்டின் தந்தை. சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு நெப்போடிசம் (திறமையை புறக்கணித்து வாரிசுகளுக்கு வாய்ப்பு தருதல்) பெரும் விவாதமாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நெப்போடிசம் குரூப்பில் மகேஷ் பட், அலியா பட் ஆகியோரும் உள்ளனர். 

இதனால் இவர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி இவர்களின் சடக் 2 படம் டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் 6 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ளது. உலக அளவில் இதுபோல் எந்த படமும் இத்தனை டிஸ்லைக் பெற்றதில்லை. இதேபோல், சுஷாந்த் சிங் நடிப்பில் கடைசியாக வெளியான தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் 10 மில்லியன் லைக்குகளை பெற்றது. இதுவரை எந்த ஹாலிவுட் படமும் கூட இத்தனை லைக்குகளை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Alia Bhatt ,
× RELATED சைக்கிள் மூலம் 768 படிக்கட்டுகளை 30 நிமிடங்களில் கடந்து இளைஞர் சாதனை