×

படம் இயக்கப்போகும் 3 ஹீரோயின்கள்

நித்யா மேனன், ரம்யா நம்பீசன், பூ பார்வதி ஆகியோருக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது.  அதாவது, மூவரும் விரைவில் படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்கள். ஏற்கனவே  ரம்யா நம்பீசன் குறும்படம் மூலம் இயக்குனராகி விட்டார். ஆனால், நித்யா  மேனன் மட்டும் தயங்கிக்கொண்டே இருக்கிறார். இதற்கிடையே பூ பார்வதி,  தன்னிடம் இரண்டு கதைகள் தயாராக இருப்பதாக சொல்லியிருக்கிறார். அதற்கான  ஹீரோக்கள் கிடைத்தவுடன் படப்பிடிப்புக்கு செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், நான்கு ஹீரோயின்களில் யார் முதலில் இயக்குனராக அறிமுகமாகப்  போகிறார் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. பார்வதி கூறும்போது, ‘படம்  இயக்குவது சாதாரண வேலை கிடையாது. அதற்கு 100 சதவிகிதத்துக்கும் மேல்  முழுமையான அர்ப்பணிப்பு உணர்வு தேவை. 24 மணி நேரமும் அதுபற்றியே சிந்திக்க  வேண்டும். படம் இயக்க அவசரப்படக் கூடாது. 

அதற்கான காலம் வரும்போது அதுபற்றி  அறிவிப்பேன்’ என்றார். நித்யா மேனன் கூறும்போது, ‘பெண் இயக்குனர்கள்  மென்மையான காதல் கதைகளை மட்டுமே இயக்குவார்கள் என்ற இமேஜை உடைக்க வேண்டும்.  ஜனரஞ்சகமான ஆக்‌ஷன் ஸ்கிரிப்ட் எழுதி முடித்த பிறகுதான் டைரக்‌ஷன் செய்வது  பற்றி யோசிப்பேன்’ என்றார்.

Tags : heroines ,
× RELATED 17ம் ஆண்டு நினைவுநாள் முரசொலிமாறன் படத்திற்கு திமுகவினர் மரியாதை