×

படமாகிறது பசும்பொன் தேவர் வாழ்க்கை

பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு, தேசிய தலைவர் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. ஜெ.எம்.பஷீர் விரதம் இருந்து தேவர் வேடத்தில்  நடிக்கிறார். அவருடன் இணைந்து ஏ.எம்.சவுத்ரி தயாரிக்கும் இப்படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா போன்ற படங்களை இயக்கியவர். பசும்பொன் தேவரின் சிஷ்யர் ஏ.ஆர்.பெருமாள் தேவர் எழுதிய ‘முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்’’ என்ற புத்தகத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்படுகிறது. முக்கிய வரலாற்று தலைவர்கள் வேடத்தில் நடிப்பவர்களுக்கான தேர்வு நடக்கிறது.

Tags :
× RELATED படம் இயக்க தயாராகிறார் நெப்போலியன்