×

ஆவணபடமானது இந்திய ஊரடங்கு

தனுஷ் நடித்த மரியான் படத்தை இயக்கியவர் பரத்பாலா. ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆல்பம் உள்ளிட்ட பல ஆல்பங்களையும் இயக்கி உள்ளார். தற்போது கொரோனா கால ஊரடங்கை மீண்டும் எழுவோம் என்ற தலைப்பில் ஆவண படமாக இயக்கி உள்ளார். கடந்த 2 மாதத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் நடந்த ஊரடங்கை 117 பேர் கொண்ட 15 குழுக்கள் இந்தியா முழுக்க பயணித்து ஊரடங்கு காட்சிகளை படமாக்கி உள்ளனர். இந்த காட்சிகள் 4 நிமிட ஆவணப் படமாக தொகுக்கப்பட்டுள்ளது. ‘இதுவரை பார்த்திராத தேசிய ஊரடங்கை நாங்கள் படம் பிடித்துள்ளோம். கண்டிப்பாக வரும் தலைமுறையினர் கண்ணுக்கு தெரியாத ஒரு நோய் தொற்றால் இந்தியா எப்படி முழுமையாக ஸ்தம்பித்தது என்பதை தெரிந்து கொள்ள முடியும்’ என்கிறார் பரத்பாலா.

Tags : Indian ,
× RELATED இந்தியன் 2வில் ஒரு பாட்டுக்கு ஆடும் நடிகை?