×

விஷாலை மிஸ் செய்கிறேன்

துப்பறிவாளன் படத்தை விஷால் நடிப்பில் இயக்கினார் மிஷ்கின். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் துப்பறிவாளன் 2 படத்தை லண்டனில் மிஷ்கின் படமாக்கி வந்தார். இந்நிலையில் தனக்கு சம்பளம் அதிகமாக தரவேண்டும் என இந்த படத்தை தயாரித்து நடித்து வரும் விஷாலிடம் மிஷ்கின் முறையிட்டதாக கூறப்படுகிறது. படத்துக்கான செலவுகள் ஏற்கனவே கூடிவிட்டதாக கூறி மிஷ்கினுடன் விஷாலுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் விஷாலை பற்றி இப்போது மிஷ்கின் கூறும்போது, ‘திரையுலகில் இதுபோல் நடப்பது சகஜம். விஷால் எனக்கு சகோதரன் போன்றவன். 5வது மாடியிலிருந்து நான் குதிக்க சொன்னாலும் குதிப்பான். அவனை மிஸ் செய்கிறேன்’ என்றார்.

Tags : Vishal ,
× RELATED நடிகர் விஷாலின் நிறுவன மேலாளர்...