×

கேரளாவில் தவித்த பீகார் மக்கள் ஊர் திரும்ப உதவிய நீது சந்திரா

பிரபல பாலிவுட் நடிகை நீது சந்திரா, தமிழில் யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை,  வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது: ஆன்லைன் மூலமாக வேண்டுகோள் விடுத்து, அதன்மூலம் கிடைக்கும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வருகிறேன். அதை தவிக்கும் தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் ஒரு தன்னார்வ நிறுவனத்திற்கு அனு ப்பி வைக்கிறேன். எனது சகோதரர் அங்கேயே சமையல் வேலை செய்கிறார். கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பதாக, அங்கிருந்து ஒருவர் எனக்கு தகவல் அனுப்பினார். அதன்பிறகு சுமார் 35 பேர் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தேன். பீகாரில் உள்ள தொழிலதிபர்கள் புதிய தொழிற்சாலைகளை தொடங்கி, அங்குள்ள மக்களுக்கு அங்கேயே வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்கு அந்த மாநில அரசும் உதவி செய்ய வேண்டும்.

Tags : Neetu Chandra ,Bihar ,Kerala ,
× RELATED பீகாரில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 83 பேர் பலி: 30 பேர் காயம்