×

அப்பாவின் பிறந்தநாளில் பட அறிவிப்பு

தெலுங்கில் சரிலேரு நீக்கெவரு என்ற படத்துக்கு பிறகு மகேஷ் பாபு நடிக்கும் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. தற்போது ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் நடிக்கும் ஆர்ஆர்ஆர் என்ற படத்துக்கு பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக எஸ்.எஸ்.ராஜமவுலி பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், தனது தந்தையும், தெலுங்குப் படவுலக சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணாவின் பிறந்தநாளில், தனது அடுத்த படத்தை பற்றி அறிவித்துள்ளார் மகேஷ் பாபு. கீதா கோவிந்தம் என்ற படத்தை இயக்கிய பரசுராம் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். 

இதற்கு சர்காரு வாரி பாட்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. தமன் இசை அமைக்கிறார். 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. அப்படியென்றால், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் என்ன ஆனது என்று ரசிகர்கள் கேட்கிறார்கள். அதற்கான பதில் கிடைக்கவில்லை.

Tags : Image announcement ,dad ,birthday ,
× RELATED டேய் செல்லம்... வேணாம்டா... அப்பா-அம்மா...