×

சின்னத்திரை படப்பிடிப்பு 10ம் தேதி முதல் தொடக்கம்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அரசு அனுமதி அளித்துள் ளது. அதற்கு சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது இருப்பதால், வரும் 10ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும். வெளியூரில் இருக்கும் நடிகர், நடிகைகள் வரவேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்களை பயன்படுத்துபவர்கள் இன்சூரன்ஸ் பாலிசி  எடுக்க வேண்டும்.படப்பிடிப்புகள் எங்கு நடக்கிறது, எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் என்ற விபரத்தை, அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்டவர்களின் ஆதார் நகலுடன் அரசுக்கு வழங்க வேண்டும். 

இதனால்தான் 10ம் தேதி படப்பிடிப்புகள் தொடங்குகிறது. பையனூர் திரைப்பட நகரில் கட்டப்பட இருக்கும் தொழிலாளர் குடியிருப்புக்கு முதல்வர்  அடிக்கல் நாட்டினார்.  முதற் கட்டமாக ஆயிரம் வீடுகள் கட்டப்படுகிறது. தவிர, ஜெயலலிதா பெயரில்  கட்டப்படும் படப்பிடிப்பு  அரங் கிற்கு 2வது தவணையாக 50 லட்சம் ரூபாயை முதல்வர் வழங்கியுள்ளார். பண வசதி இல்லாத ஏழைக்கலைஞர்கள் 2 ஆயிரம் பேருக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். இதுகுறித்து ஆவன செய்வதாக முதல்வர் தெரிவித்தார்.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...