×

மனோபாலா, சிங்கமுத்து மீது நடிகர் சங்கத்தில் வடிவேலு புகார்

நடிகர் வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்க சிறப்பு அதிகாரிக்கு ஒரு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்துக்கு என்னால் முடிந்த சில உதவிகளை செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தி வரும் யூடியூப்  சேனலில், நடிகர் சிங்கமுத்துவை பேட்டி எடுத்துள்ளார். அதில் மனோபாலா என்னை பற்றி கேள்வி கேட்க, சிங்கமுத்து அதற்கு என்னை பற்றி தரக்குறைவான, தவறான செய்திகளையும், பொய் பிரசாரங்களையும் செய்துள்ளார். அதை பலருக்கும் பகிர்ந்துள்ளனர்.இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற் கனவே எனக்கும், சிங்கமுத்துவுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனவே, என்னை பற்றி தவறாக பேசிய மனோபாலா, சிங்கமுத்து மீது சங்க விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் வடிவேலு கூறியிருக்கிறார்.

Tags : Vadivelu ,Actors Association ,
× RELATED ‘வடிவேலுவை கடித்த நாய்கள் செத்ததை போல...