×

தனி விமானத்தில் தொழிலாளர்களை ஊருக்கு அனுப்பி வைத்த சோனு சூட்

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஊரடங்கில் அவர் ஆற்றி வரும் பணிகளுக்கு பாராட்டுகள் குவிகிறது. தனது 4 மாடி ஓட்டலை கொரோனா ஒழிப்பு மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கி உள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர் களுக்கு தினந்தோறும் உணவு வழங்குகிறார். மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து சொந்த ஊர் செல்ல பஸ் ஏற்பாடு செய்து கொடுக்கிறார். 

இப்பணிகளின் உச்சகட்டமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனி விமானத்தில் சொந்த ஊர் அனுப்பி வைத்துள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ தனி கால் சென்டர் தொடங்கி உள்ளார். இதன்மூலம் கொச்சியில் தவித்த ஒடிசா தொழிலாளர்கள் புவனேஸ்வர் செல்ல, சொந்த செலவில் தனி விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தார். இந்த விமானத்தில் 167 தொழிலாளர்கள் பயணித்து, தங்கள் சொந்த ஊருக்கு போய் சேர்ந்தார்கள்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!