×

கொரோனா நிதி கொடுத்தால் வாணி கபூரை சந்திக்கலாம்

பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூர், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். தற்போது ஊரடங்கால் பசியால் வாடும் தினக்கூலி பணியாளர் களுக்கு உணவு வழங்க ஒரு பிரபல ஆன்லைன் நிறுவனத்துடன் இணைந்து நிதி திரட்டுவதை அறிவித்துள்ளார். ஏழை குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வேளை உணவுக்கு ₹30 செலவாகும். குறைந்தபட்சம் அத்தொகையை நிதியாக கொடுத்து இந்நிகழ்ச்சியில் இணையலாம். அப்படி இணைபவர்களில் இருந்து 5 பேர் தேர்வு செய்யப்பட்டு வாணி கபூருடன் ஒருநாள் முழுவதும் கலந்துரையாடலாம். விருந்து மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vani ,Kapoor ,Corona ,
× RELATED சோனம் கபூருக்கு நெருக்கடி கொடுத்த ரசிகர்கள்