×

கொரோனா... இத்தோடு விட்டு விடு! வைரலாகும் வைகை புயலின் பாடல்

சென்னை: கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் வந்தது எப்படி என்பது குறித்து காமெடி நடிகர் வடிவேலு பாட்டுப்பாடி விளக்கியுள்ளார். இயற்கை வளத்தை மனிதன் அழித்ததால்தான் கொரோனா தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர், வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற அந்த பாடலில் உள்ள வரிகள்:

காடுகளை அழித்தோம்
மண்வளம் கெடுத்தோம்
நீர்வளம் கெடுத்தோம்
நம் வாழ்க்கையை
தொலைத்தோம்
வைரஸாய் வந்தே... நீ
பாடம் புகட்டி விட்டாய்
இயற்கையை மதிக்கின்றோம்
இத்தோடு விட்டுவிடு
என்று அவர் பாடியுள்ளார். தற்போது இப்பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : Corona ,Vaigai Storm ,
× RELATED சென்னையில் கொரோனாவில் இருந்து...