×

பனைமர உயரத்தில் பல்டியடித்த ஹீரோயின்

ஹீரோயின்கள பலரும் தற்போது உடற்கட்டை பராமரிக்க தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை கடைபிடிக்கின்றனர். சில நடிகைகள் கடற்கரையில் சென்று யோகாசனம், ஜிம்னாஸ்டிக் பயிற்சிகள் மேற்கொண்டு கடினமான பயிற்சிகள் செய்யும் போது அதை புகைப்படமாக எடுத்து பகிர்கின்றனர். நடிகை சம்யுக்தா ஹேக்டே உயிரை பணயம் வைத்து சாகச பயிற்சிகள் செய்கிறார். சமீபத்தில் காட்டு பகுதிக்கு சென்றவர் ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு கயிற்றை கட்டினார்.

பிறகு தனது இடுப்பில் பக்கில்ஸுடன் கூடிய பெல்ட் அணிந்து அதிலிருக்கும் இரும்பு வளையத்தை உயரத்தில் கட்டிய காற்றுக்குள் நுழைத்து பனை மர உயரத்திற்கு நடந்து கயிற்றிலேயே அமர்ந்தபடி நகர்ந்து சென்று அந்தரத்தில் பல்டியடித்து ஆபத்தான பயிற்சி செய்தார். சம்யுக்தாவின் இந்த சாகச பயிற்சிக்கு சில நடிகர்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்திருப்பதுடன் அக்கறையுடன் கவனமாக பாதுகாப்புடன் பயிற்சி மேற்கொள்ள வும் என்று அட்வைஸும் செய்திருக்கின்றனர்.

Tags :
× RELATED திருவாடானை அருகே ஆஸ்திரேலியா கடத்த...