×

தயாரிப்பாளர் சங்க தேர்தல் களம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை பாரதிராஜா தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. விரைவில் சங்கத்துக்கு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கு இப்போதே சங்கத்தினர் களத்தில் குதித்திருக்கின்றனர். தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளராக டி.சிவா  தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பாதுகாப்பு அணி உருவாகி இருக்கிறது. அதற்கான சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் செயலாளர், துணை தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் முடிந்துவிட்டது. புதிதாக தேர்வான நிர்வாகிகள் இல்லாத நிலையில் புதுப்பிக்க முடியவில்லை. யாருக்காவது இன்சூரன்ஸ் உதவி தேவைப்பட்டால் இந்த அணியிடம் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Producer Association Election Forum ,
× RELATED சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன்