மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு

கோலாலம்பூர்: மலேசிய பிரதமராக எதிர்க்கட்சி தலைவராக இருந்த அன்வர் இப்ராகிம் பதவியேற்றார். மலேசியாவில் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 19ம் தேதி பொதுத் தேர்தல் நடந்தது. இதில் 24 ஆண்டுகள் பிரதமராக இருந்த மகாதீர் முகமது சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார். குறைந்தபட்ச பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி 82 தொகுதிகள், முகைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி 73 இடங்களை கைப்பற்றி உள்ளன. எந்த கட்சிக்கும், கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையும் என அரசியல் நிபுணர்கள் கணித்திருந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராகிமுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கருதி அவரை புதிய பிரதமராக மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமத் ஷா அறிவித்தார். இதைத் தொடர்ந்து நாட்டின் 10வது பிரதமராக அன்வர் நேற்று பதவியேற்று கொண்டார். தோல்வியை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி தலைவர் முகைதீன் யாசின், “நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை அன்வர் இப்ராகிமால் நிரூபிக்க முடியுமா? என சவால் விடுத்துள்ளார்….

The post மலேசியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு appeared first on Dinakaran.

Related Stories: