×

“பிரம்மாண்டமாக துவங்கியது ஹெய் வெசோ” திரைப்படம் !!

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் தன் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கும் சுதீர் ஆனந்த் (சுடிகாளி சுதீர்) தனது புதிய படத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரசன்னா குமார் கோட்டா இயக்குநராக அறிமுகமாகும் , சிவா சேர்ரி – ரவிகிரண் ஆகியோர் வஜ்ர வராஹி சினிமாஸ் சார்பில் தங்கள் முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறார்கள். இது சுதீர் ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ஐந்தாவது படமாகும். “கோர்ட்” படத்தில் வில்லனாக, தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சிவாஜி, இப்புதிய படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“ஹெய் வெசோ” எனும் தலைப்பு, விவசாயிகளிடையே பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நாட்டுப்புறச் சொல் என்பதால், படத்திற்கு இயற்கையான மண் மணத்தைக் கொடுக்கிறது. டைட்டில் டிசைன் வெகு அற்புதமாக கப்பலின் வடிவில், அதில் பெண்ணின் கால் வடிவில் ‘S’ எழுத்தாக அமைந்திருப்பது சிறப்பு. ஆயுதம் ஏந்திய மர்ம மனித உருவமும் அதில் காணப்படுகிறது.

டைட்டில் போஸ்டரில் புராணத்தன்மையும் கிராமிய வட்டார சுவையும் கலந்திருக்கிறது. பொற்காலணியும் விரலணியும் அணிந்த ஒரு தெய்வீக பாதம் பெரிய பச்சை இலையில் பதித்துக் கொண்டிருக்கும் காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. அந்த இலையில் சடங்கினை குறிக்கும் வகையில் சமைத்த சாதம், ஆடு-கோழி தலைகள், பூக்கள், குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. இரத்தம் சொட்டும் வாள், கதையின் தீவிரத்தன்மையையும், தெய்வீக சக்தியும் இருப்பதை வலியுறுத்துகிறது.

படம் இன்று பிரமாண்ட விழாவுடன் கோலாகலமாக தொடங்கப்பட்டது. ஹீரோ நிகில் டைட்டிலை வெளியிட்டார். பன்னி வாசு திரைக்கதைப் பிரதியை வழங்கினார். இயக்குநர்கள் வசிஷ்டா, சந்தூ மொண்டேட்டி, மெஹர் ரமேஷ் கேமரா ஸ்விட்ச் ஆன் செய்தனர்.வினாயக் முகூர்த்தக் காட்சிக்கு க்ளாப் அடித்தார். இயக்குநர் பிரசன்னா குமார் முதல் காட்சிக்கு “ஆக்சன்” கூறினார்.

நடாஷா சிங் , நக்‌ஷா சரண் ஆகியோர் ஹீரோயின்களாகவும், பிரபல கன்னட நடிகை அக்‌ஷரா கவுதா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

இளம் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழு இந்த படத்தில் பணியாற்றுகிறது. அனுதீப் தேவ் இசையமைக்க, சுஜாதா சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். சோட்டா கேபிரசாத் எடிட்டிங், பிரஹ்மா கடலி (ஆர்ட் டைரக்சன், சிந்தா ஸ்ரீனிவாஸ் எழுத்து ஆகிய பணிகளை மேற்கொள்கிறார்கள்.

“ஹெய் வெசோ” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்படவுள்ள இப்படத்தில் சுதீர் ஆனந்த், சிவாஜி, நடாஷா சிங், நக்‌ஷா சரண், அக்‌ஷரா கவுதா, மொட்ட ராஜேந்திரன், கெட்அப் ஸ்ரீனு, பெவரா துஹிதா சரண்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Tags : SUDIR ANAND ,SUDIKALI SUDIR ,SINNATHRA ,SILVER SCREEN ,PRASANNA KUMAR KOTA ,SHIVA CHERRI—RAVIKIRAN ,VAJRA VARAHI CINEMAS ,Sudhir Anand ,Shivaji ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...