×

சசிகலா வேடம் பிரியாமணி விலகல்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து ஏ.எல்.விஜய் இயக்கும் படம், தலைவி. ஜெயலலிதாவாக கங்கனா ரனவத், எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, ஜானகி எம்.ஜி.ஆராக மதுபாலா நடிக்கின்றனர். சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் அமைக்கப்பட்ட அரங்கில், எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு நடந்த சம்பவங்கள் சில நாட்களுக்கு முன் படமாக்கப்பட்டது.

சசிகலா கேரக்டரில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், தற்போது அவர்  நடிக்கவில்லை. தெலுங்கு அசுரன் ரீமேக்கில் மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிப்பதுடன், இந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில், கீர்த்தி சுரேசுக்கு பதிலாக நடித்து வருவதும் தான் பிரியாமணி விலகலுக்கு காரணம். இந்நிலையில், சசிகலா கேரக்டரில் பூர்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Tags : Sasikala ,Priyamani ,
× RELATED சசிகலா காலில் விழுந்துதான் அனைவரும்...