×

ராஷ்மிகாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு ரசிகர் ஓட்டம்

சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. கன்னட நடிகையான இவர், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சுல்தான் படம்தான் அவரது முதல் படம். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஐதராபாத் வந்தார் ராஷ்மிகா. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடந்து வரும்போது, ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது.

அப்போது திடீரென ஒரு ரசிகர், ராஷ்மிகாவை நெருங்கி வந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ராஷ்மிகா அதிர்ச்சி அடைந்தார். முத்தம் கொடுத்ததும் உடனே அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ராஷ்மிகாவின் உதவியாளர்கள் அந்த நபரை பிடிக்க ஓடினர். ஆனால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Rashmika ,
× RELATED அனிமல் 2ல் ராஷ்மிகா நீக்கமா?