×

குஷ்புவின் சக்காளத்தி ஆன ஆதி

ஹிப் ஆப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடித்த படம் நான் சிரித்தால். சுந்தர்.சி தயாரிப்பு. ராணா இயக்கி உள்ளார். இப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றதையடுத்து படத்தில் நடித்தவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் சுந்தர்.சி மனைவியும் நடிகையுமான குஷ்பு பங்கேற்று பேசினார். அவர் கூறும்போது,’ ‘அவ்னி மூவிஸ் பட நிறுவனம் எனக்கும் சுந்தர்.சிக்கும் கனவு. எங்களுக்கு தெரிந்தது சினிமா மட்டும்தான்.

வெற்றிக்கு முழு காரணம் கணவர் சுந்தர்.சி மட்டும்தான். ஆதி எங்கள் குடும்பத்திற்குள் வந்தது எனது சிறிய மகளால் தான். அவள்தான் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை அறிமுகப்படுத்தினாள். எனக்கு சக்காளத்தியும் ஆதிதான். எனது கணவரும், ஆதியும் பேச ஆரம்பித்தால் நேரம் காலம் பார்க்காமல், இரவு 2 மணி ஆனாலும் பேசிக் கொண்டேயிருப்பார்கள்.

Tags : Adi ,wheelman ,Khushboo ,
× RELATED பல்லாங்குழியாடும் நடிகை குஷ்பு