×

இடுப்பு காட்டி அசத்திய இலியானா சிரிப்பு காட்டி பயமுறுத்துகிறார்

இடுப்பழகி என்று ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டவர் இலியானா. தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். அதற்கு முன்னதாக கேடி என்ற படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் முன்னணி  ஹீரோக்களுடன் ஜோடிபோட்ட இலியானாவுக்கு திடீரென்று இந்தி படத்தில் நடிக்க ஆசை வர தென்னிந்திய படங்களுக்கு டாட்டா காட்டிவிட்டு பாலிவுட்டுக்கு பறந்தார். ஐதராபாத்தில் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார்.

ஆனால் எதிர்பார்த்தபடி இந்தியில் பட வாய்ப்புகள் வரவில்லை. அங்கிருக்கும் ஹீரோயின்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். சர்ச்சை பேச்சு, டேட்டிங் என்று ஏடாகூடமான செய்திகளையும் அள்ளித்தந்து பிரபலம் ஆனார் இலியானா. அதுவும் பட வாய்ப்பை பெற்றுத்தர வில்லை.
பாலிவுட்டில் எப்படியும் தனக்கென ஒரு இடம் பிடித்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் மீண்டும் புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இலியானா அடிக்கடி இணைய தள பக்கம் மூலம் ரசிகர்களுடனும், தெரிந்த இயக்குனர்கள், நடிகர்களிடம் பேசி வருகிறார்.

ரசிகர்கள் போடும் கமென்ட்டுக்கும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார். ரசிகர் ஒருவர் இலியானாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில், ‘உங்கள் சிரிப்பு என்னை கொல்கிறது. குரலோ மிக மிக இனிமை’ என பதிவிட்டிருந்தார். அதைபார்த்து மகிழ்ச்சி அடைவார் என்று எதிர்பார்த்தால், ‘நீங்க சொல்றது இந்த சிரிப்பான்னு பாருங்க’ என திகில் பட பாணியில் கோரமான சிரிப்பை வெளிப்படுத்தி ரசிகருக்கு அதிர்ச்சி தந்திருக்கிறார்.

Tags :
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்