×

ஸ்ருதிஹாசன் மீண்டு வருவாரா?

கமல்ஹாசன் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சூர்யாவின் 7ம் அறிவு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அவரது நடிப்பு பயணம் மெல்லமாக தொடங்கினாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஸ்டெடியாக சென்றுகொண்டிருந்தது. முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். 2017ம் ஆண்டு சிங்கம் 3 படத்தில் நடித்தபின் அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது. ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கினார். அந்த நேரத்தில்தான் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்சேலுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

இருவரும் நெருக்கமாக பழகினார்கள். நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றளவுக்கு தகவல் வெளியானது. ஒன்றரை வருடம் நீடித்த இந்த காதல் திடீரென்று முடிவுக்கு வந்தது. மைக்கேலுடனான காதலை பிரேக் அப் செய்துகொண்டு சிங்கிள் ஆனார் ஸ்ருதி.
மீண்டும் படங்களில் நடிக்க முடிவுவெடுத்த ஸ்ருதிக்கு விஜய்சேதுபதியுடன் ஜோடி போட வாய்ப்புவந்தது.

லாபம் என்ற படத்தில் தற்போது அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அதேபோல் தெலுங்கில் கிராக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த 2 படங்கள் தவிர புதிய படம் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. நடிப்புக்கு ஒரு வருடம் இடைவெளிவிட்டபோது அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்தது. காதல் ஜோரில் அதனை ஏற்க மறுத்தார். அதுவே அவருக்கு மைனஸ் ஆகிவிட்டது.

அவரிடம் கால்ஷீட் கேட்டு அணுகுவதை இயக்குனர்கள் நிறுத்திக்கொண்டு வேறு ஹீரோயின்களை தேடினர். இது அவரை சிந்திக்க தூண்டி இருக்கிறது. நடிகர், நடிகை எல்லோருக்குமே ஒரு கட்டத்தில் திரையுலகில் மார்க்கெட் டல்லடிக்கும் நிலை உருவாகும். அதையும் மீறி தாக்குபிடிப்பவர்கள் மீண்டும் மார்க்கெட் சூடு பிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை ஸ்ருதிக்கும் வந்தால் இந்த ஆண்டிலேயே அவரால் நிறைய படங்களில் நடிக்க முடியும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

Tags : Sruthihasan ,
× RELATED கொரோனாவுக்கு பயந்து தனிமையில்...