×

அஜீத் வீடியோ வெளியிட்ட போலீஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் வெற்றி படமாக அமைந்தது. இதில் அஜீத்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க அவர்களது மகளாக அனிகா நடித்திருந்தார். படத்தில் அனிகாவை ஒரு கூட்டம் கடத்தி செல்லும். அதை செல்போனில் தனது தாய் நயன்தாராவிடம் அனிகா சொல்வார். பதறிப்போகும் நயன்தாரா அந்த தகவலை அஜீத்திடம் சொல்லி மகளை காப்பாற்றச் சொல்வார். அவர் விரைந்து சென்று அடித்து துவம்சம் செய்து மகளை காப்பாற்றுவார். இந்த காட்சியை தேனி மாவட்ட போலீசார் நெட்டில் வெளியிட்டு போலீசாரின் காவலன் செயலியை டவுன்லோடு செய்து ஆபத்தான நேரங்களில் போலீஸ் உதவியை உடனே பெறலாம் என பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

Tags : Ajith ,
× RELATED நேரில் சந்திக்க முடியாததால் நடிகர்...