×

காதலனை உதறிய நடிகை சனாகான்: பல பெண்களை ஏமாற்றியதாக புகார்

சிலம்பாட்டம் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் சனாகான். பயணம், ஆயிரம் விளக்கு, ஈ போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தி, தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். பாலிவுட் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார் சனா. இருவரும் நீண்ட நாட்களாக ஜோடிப் பறவைகளாக வலம் வந்துக்கொண்டிருந்தனர். தற்போது இந்த ஜோடிக்குள் யாரோ ஒரு பெண் புகுந்து இருவரையும் பிரித்துவிட்டாராம். இதையடுத்து மெல்வினிடமிருந்து சனாகான் பிரேக் அப் செய்திருக்கிறார்.

இதுபற்றி அவர் தனது இணைய தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் காதல் பற்றி முதன்முறையாக வெளிப்படையாக பேசுகிறேன். அதற்கான தைரியம் வந்துள்ளது. ஏனென்றால் எங்கள் உறவை பலரும் நம்பியிருந்தார்கள். அதன் மீது மரியாதை வைத்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக யாரிடமிருந்து அன்பை பெற்றோனோ அவரிடமிருந்து தற்போது அந்த அன்பு கிடைக்கவில்லை. அது தெரியவதற்கு எனக்கு ஒரு வருடம் ஆனது. அதற்கு காரணம் அவர் மீது நான் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்ததுதான்.

நான் தீர்க்கமான ஒரு முடிவை தற்போது எடுத்திருக்கிறேன். அவர் (காதலன்) ஒரு ஏமாற்றக்காரர். தனது புகழை பயன்படுத்தி இதுபோன்று செய்கிறார். நான் உள்பட இதுவரை பல பெண்களை அவர் ஏமாற்றியிருக் கிறார். என்னை திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விரும்பினார். அப்படி பிறக்கும் பிள்ளைகளுக்கு அவர் என்ன கற்றுத்தருவார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். எங்கள் உறவை பிரிப்பதில் ஒரு பெண் மிகவும் தீவிரம் காட்டினார். அவரை நினைத்தால் அவமான மாக இருக்கிறது. அவரது பெயரை சீக்கிரமே வெளியிடுவேன். அதன் மூலம் மற்றவர்களாவது அந்த பெண்ணின் குணத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ளட்டும். இவ்வாறு சனா கான் கூறி உள்ளார்.

Tags : Sanakan ,
× RELATED திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதால்...