- தீபாவளி
- நாட்டி நடராஜ்
- சிங்கம் புலி
- தீபாவளி விழா
- ராஜநாதன் பெரியசாமி
- சிங்கம் புலி
- முருகானந்தம்
- சாம்ஸ்
- மனோபாலா
- எம்.ஆர்.எம்.ஜே. சுரேஷ்
- சதீஷ் செல்வம்

நடிகர் நட்டி நட்ராஜ், சிங்கம்புலி ஆகியோர் நடித்திருக்கும் ‘கம்பி கட்ன கதை’ திரைப்படம் தீபாவளி பண்டிகை சிறப்பாக உலகம் முழுவதும் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கம்பி கட்ன கதை ‘ படத்தில் நட்டி நடராஜ், சிங்கம் புலி, முருகானந்தம், சாம்ஸ் ,மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம் .ஆர் .எம் .ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் செல்வம் இசையமைத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி கலகலப்பான படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை மங்காத்தா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவி தயாரித்திருக்கிறார். இத் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அத்துடன் படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
