சென்னை: காசிமேட்டில் கார்த்திகை மாதத்திலும் மீன் வாங்க அலைமோதிய கூட்டத்தால் விலை உயர்ந்து விற்கப்பட்டது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், பொதுவாக வார விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளில் அதிக விசைப்படகுகள் மீன்களை விற்பனை செய்வதற்காக கடலில் சென்று பிடித்து வருவது வழக்கம். தற்போது, வானிலை மாற்றத்தின் காரணத்தினால் நேற்று குறைந்த விசைப்படகுகளே மீன்பிடித்து கரைக்கு திரும்பின. இதில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நள்ளிரவு முதல் மீன்கள் ஏலம் விடுவதால் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் பொதுமக்கள் வந்து மீன்களை வாங்க வந்தனர். இதில், குறைந்த விசைப்படகுகளின் வருகையால் மீன்களின் வரத்து குறைவாகவே காணப்பட்டது. மேலும், கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு விரதம் இருப்பதால் காசிமேட்டில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் என்று பேசப்பட்டது. ஆனால், கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நேற்று மீன்களை வாங்க மக்கள் கூட்டம் கடல் அலை போல் நிரம்பி காணப்பட்டது. இதனால், மீன்களின் விலை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் மீன் பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்….
The post காசிமேட்டில் கார்த்திகை மாதத்திலும் மீன் வாங்க அலைமோதிய கூட்டம் appeared first on Dinakaran.
