பெரம்பலூர் அருகே நிரம்பி வழியும் சின்ன முட்லு நீரோடை: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையாக இருப்பதுதான் பச்சைமலை தொடர்ச்சி. பச்சைமலை தாரைவார்க்கும் தண்ணீரை சேமித்து வைக்கத்தான் முதலில், 50 ஆண்டுகனவை நனவாக்க கல்லாற்றின் குறுக்கே விசுவக்குடி அணைக்கட்டு அமைக்கப்பட்டது. அப்போதைய கலெக்டர் தரேஷ் அஹமதுவால் 2015ல் வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி அருகே பச்சைமலை செம்மலை ஆகியவற்றை இணைத்து விசுவக்குடி அணைக்கட்டு 10.30 மீட்டர் உயரத்திற்கு, 43.42 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.இந்த அணைக்கட்டில், 25.07 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதுவரை ஏழு முறை நிரம்பி வழிந்துவிட்டது. அதேபோல்  ஆலத்தூர் தாலுகாவில் மருதையாற்றின் குறுக்கே 212. 47 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாக கொட்டரை பகுதியில் கொட்டரை அணைக்கட்டு 2016ம் ஆண்டு கட்டப்பட்டது. 2020ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை இதுவரை 3முறை நிரம்பி வழிந்துவிட்டது. சிறுவாணி ஆற்று தண்ணீருக்கு இணையாக சுவை கொண்ட சின்னமுட்லு தண்ணீரை மாவட்ட மக்களுக்கு குடி நீராக பயன்படுத்தவும், பாசனத்திற்காக பயன்படுத்தவும் வழியுள்ளதால் விரைந்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கற்பாறை உருளைகளுக்கு இடையே கர்ஜித்தபடி செல்லும் சின்னமுட்லு நீரோடை பெரம்பலூர் மாவட்ட புளியஞ்சோலையாக மாறி வருகிறது. இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் பைக்குகளில் படையெடுத்துச்சென்று நீரோடையில் நீராடி மகிழ்ந்து வருகின்றனர்….

The post பெரம்பலூர் அருகே நிரம்பி வழியும் சின்ன முட்லு நீரோடை: சுற்றுலா பயணிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Related Stories: