×

ஆஸ்திரேலியாவில் படமான கிரைம் படம்

சிம்புவை வைத்து ‘கெட்டவன்’ படத்தை இயக்கிய என்.கே.கண்டி இயக்கும் புதிய படம் ‘டே நைட்’. இப்படம் இயக்குனர் கூறும்போது, ‘எல்லாருக்கும் காதல் புனிதமானது என்றால் எனக்குக் காதல்  கொடூரமானது. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்வதுதான் கதையின் சிறப்பம்சம். படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா பாத்திரங்களும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்பதை புதுமையான திரைக்கதையுடன் படம சொல்கிறது. ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் 2 மாதங்கள் தங்கி படமாக்கப்பட்டிருக்கிறது.

ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஆதர்ஷ்,  ஃபின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கின்றனர். அரவிந்த் ஒளிப்பதிவு. அரிஷின் இசை. ஜோஜோ மற்றும் ரியா சௌத்ரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ‘எங்களுக்கு சினிமா பின்புலம் எதுவும் கிடையாது. வெறும் பத்து லட்சம் ரூபாயில் தரமாக இப்படத்தை இயக்குனர் கண்டி டைரக்டு செய்திருக்கிறார். சினிமாமேல் இருக்கும் காதல் காரணமாக ரிஸ்க் எடுத்து இப்படத்தை தயாரித்து நடித்துள்ளேன்’ என்றார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆதர்ஷ்.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்