×

டாணா - விமர்சனம்

நோபல் மூவிஸ் தயாரிப்பில் யுவராஜ் சுப்பிரமணி எழுத்து மற்றும் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா யோகி பாபு ஹரிஷ் பேர் ஆடி பாண்டியராஜன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் டாணா. பரம்பரை பரம்பரையாக போலீஸ் வேலை பார்த்து வரும் டாணா காரர்கள் குடும்பமாக சக்திவேல்(வைபவ்) பூர்வீகம். ஆனால் அவருடைய அப்பா உயரம் குறைவு காரணமாக போலீஸ் வேலை கிடைக்காமல் போகவே சக்திவேலை எப்படியாவது போலீஸ் ஆக்குவேன் என உறுதியளிக்கிறார் . சக்தி வேலுவும் குடும்பத்தின் பெயரை காப்பாற்ற வேண்டி போலீஸ் தேர்விலும் இதன் சிறப்பை வெளிப்படுத்துகிறார் சக்திவேல்.

ஆனால் தடைக்கல்லாக நிற்கிறார் உயரதிகாரி முடிவில் சக்திவேல் தன் குடும்பத்தின் பெயரை காப்பாற்றினாரா நினைத்தபடி போலீஸ் வேலை கிடைத்ததா என்பது மீதிக்கதை. தனக்கு என்ன கதை என்ன பாத்திரம் சரியாக பொருந்துமோ அதை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் வைபவம் அந்த அளவில் அவருக்கு பாராட்டுக்கள் இந்தப்படத்திலும் தனக்கு கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார் நந்திதா ஸ்வேதா சில இடங்களில் அதிக மேக்கப்புடன் நான்தான் ஹீரோயின் என்று வலம் வருகிறார் யோகி பாபுவின் காமெடி சில இடங்களில் சிரிப்பு வரவழைக்கின்றன.

முதல்பாதியில் கொஞ்சம் கதைக்குள் செல்லாமல் சுற்றுகிறார்கள் பின்பாதியில் வைக்கப்பட்ட கனமான கதைக்கருவை முன் பாதியிலேயே ஆரம்பித்திருக்கலாம். படத்தில் வைபவிற்கு பயம் வரவும் பயத்தை போக்கவும் வரும் பேய் காட்சிகள் உண்மையாகவே படத்தில் பேய் இருக்கிறது என்கிறார் களா இல்லை என்கிறார்களா. என்பது நமக்கு  சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சிவாவின் ஒளிப்பதிவு அருமை விஷால் சந்திரசேகர் இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் ஆனால் பின்னணி இசை படத்திற்கு பலம். மொத்தத்தில் சின்னச் சின்ன கிளிஷேகளை மறந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்தால் என்ஜாய் செய்யலாம் இந்த டாணா படத்தை.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...