×

ரஜினி, அஜித் பட நடிகைக்கு ரகசிய நிச்சயதார்த்தம்

சென்னை: ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஹுமா குரேஷி. இவர் இந்தியில் பிரபல நடிகையாக உள்ளார். அவரது பயான் இந்தி படம் சமீபத்தில் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருந்தது. அந்த விழாவில் ஹுமா குரேஷியும் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் நடிகை ஹுமா குரேஷிக்கு அவரது காதலர் ரச்சித் சிங் என்பவருடன் நிச்சயதார்த்தம் சமீபத்தில் ரகசியமாக நடந்து முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரச்சித் சிங் பாலிவுட்டில் பல முக்கிய நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக ஹுமா குரேஷி மற்றும் ரச்சித் சிங் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. இருப்பினும் அது பற்றி அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால் டொரண்டோ பட விழாவில் தனது விரலில் புதிதாக மோதிரம் அணிந்திருந்தார் ஹுமா குரேஷி. அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை அவரது நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

Tags : Rajinikanth ,Chennai ,Huma Qureshi ,Ajith ,Toronto Film Festival ,Rachit Singh ,
× RELATED ‘உங்க படத்துல உதவி இயக்குனரா வேலை...