நடிகை கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வென்ற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். தான் பெற்ற தேசிய விருதை தனது தாய்க்கு சமர்ப்பிப்பதாக கூறியிருக்கிறார். கீர்த்தியின் தாயார் மேனகாவும் பிரபல நடிகை என்பது பலருக்கு தெரிந்த விஷயம் தான். ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மேனகா. தற்போது அவரது மகள் கீர்த்தி சுரேஷ், ரஜினி நடிக்கும் 168 படத்தில் நடித்து வருகிறார்.