இமாச்சலில் தேர்தலில் 75% வாக்குப்பதிவு: வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து திடீர் சர்ச்சை

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடந்த தேர்தில் 75% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தை விதிமுறை மீறி தனியார் வாகனத்தில் எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குச் சாவடிகளில் வாக்களித்தனர். நேற்றிரவு தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இமாச்சல் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. தபால் வாக்குகள் எண்ணப்படும் போது, வாக்குபதிவு சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது. அதே கடந்த 2017ல் நடந்த தேர்தலில் 75.57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் 8ம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. கடந்த 1990ம் ஆண்டு முதல் இமாச்சலப் பிரதேசத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசுகள் மாறி மாறி அமைந்துள்ளன. அதனால் இந்த தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றிபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காரணம், இந்தத் தேர்தலில் பாஜகவில் சீட் கிடைக்காததால், 21 அதிருப்தியாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்கள் வாக்குகளை பிரிப்பார்கள் என்பதால் பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் ராம்பூர் தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் இருந்து நேற்றிரவு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், விதிகளை மீறி தனியார் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தாக, அக்கட்சியின் சட்டப் பிரிவு செயல் தலைவர் பிரனய் பிரதாப் சிங் தெரிவித்தார்….

The post இமாச்சலில் தேர்தலில் 75% வாக்குப்பதிவு: வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து திடீர் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: