ஊத்துக்கோட்டையில் மயான பாதை, மழைநீர் அகற்றும் பணி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆய்வு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மயானப் பாதை அமைக்கும் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளை நேற்று மாலை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அப்பணிகளை விரைந்து முடிக்கும்படி உத்தரவிட்டார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வடகிழக்கு பருவ மழை காரணமாக ஆரணியாற்றின் கரை பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அதேபோல் சிட்ரபாக்கம், கொய்யாதோப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை டி.ஜெ.கோவிந்தராஜன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் அப்பகுதி மக்களை பாதிக்காத வகையில் மழைநீரை துரிதகதியில் வெளியேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.பின்னர், ஆரணியாற்றின் புதிய பாலம் அருகே புதிதாக அமைக்கப்படும் மயானப் பாதை பணிகளையும் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பணிகளை விரைந்து முடிக்கும்படி பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத்,  துணை தலைவர் குமரவேல், பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன், கோல்டு மணி, ஜீவா, திமுக மாவட்ட பிரதிநிதி சம்சுதீன், இளைஞரணி நிர்வாகிகள்  ரகீம், நரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

The post ஊத்துக்கோட்டையில் மயான பாதை, மழைநீர் அகற்றும் பணி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: