முத்தமொன்று சத்தமின்றி.... ரகசிய காதலி

ராட்சஷன் படத்துக்கு பிறகு வித்தியாசமான கதைகளை தேடித் தேடி நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். அதே தேடலில் காதலியாக கிடைத்திருக்கிறார் பேட்மின்ட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. இருவரும் ெநருங்கிப் பழகி வந்தாலும் காதல் பற்றி ஓபனாக தெரிவிக்க மறுக்கிறார்கள். திருமணம் செய்துகொள்வீர்களா என்றாலும் மவுனத்தையே பதிலாக அளிக்கின்றனர். ஆனால் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் ஃபாலோ செய்வதுடன் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்கின்றனர்.

விஷ்ணுவுக்கு நேற்று பிறந்த தினம். பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். அதில் மிகவும் ஸ்பெஷலாக அமைந்தது ஜூவாலாவின் வாழ்த்து. விஷ்ணுவுக்கு அழுத்தமான முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ஹேப்பி பர்த்டே பேபி’ என வாழ்த்தியிருக்கிறார் ஜூவாலா.

இருவரும்தான் காதலிக்கவில்லை என்கிறீர்களே அப்படியென்றால் எதற்கு சத்தமில்லாமல் இந்த முத்தமெல்லாம் என ரசிகர்கள கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். விஷ்ணுவிஷால் ஏற்கனவே ரஜினி என்பவரை மணந்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது விஷ்ணு, சிங்கிள். அதாவது மறுமணத்துக்கு தகுதியானவராக இருக்கிறார்.

Tags :
× RELATED ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு