நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களுடன் வாக்குவாதம்

கோவை: பாஜ வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அதன் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றார். பின்னர் அவரிடம் டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998 போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பதுபோல் பதிவு செய்துள்ளீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அதுபோன்ற பதற்றமான நிலையை உருவாக்கும் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள்தான் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள்’’ என்றார். இதனால் நிருபர்களுக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பாஜவினர் நிருபர்களை சூழ்ந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்….

The post நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களுடன் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Related Stories: