நடிகையர் திலகம் (மகாநதி) படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு நடிப்பில் தேர்ந்தவர் என்ற பெயர் கிடைத்தது. ஆனால் கீர்த்தி மீது என்ன கோபமோ தெரியவில்லை அவரை கடுமையாக நக்கலடித்து விமர்சித்திருக்கிறார் ஒரு கவர்ச்சி நடிகை. பல்வேறு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மீது சரமாரியாக பாலியல் புகார் கூறியவர் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில்,’கீர்த்தி சுரேஷும் நானும் ஒரே விமானத்தில பயணம் செய்தோம். கீர்த்தியை யாருமே கண்டுகொள்ளவில்லை.