தள்ளுவண்டி டூ ரெஸ்டாரென்ட்

யூடியூப்பை கலக்கும் இருவர்சமையல் சார்ந்த தமிழ் யூடியூப் சேனலில் தனித்துவமான முறையில் சமைத்து அதை அசத்தலாக பதிவேற்றி வரும் இரட்டையர்கள் தான் ‘வேல்டு ஃபுட் டுயூப்’ சேனல். சிவக்கண்ணன், சம்பத்கான் நடத்துகிறார்கள்.  தமிழ்நாட்டு உணவுகளை தாண்டி இலங்கை, சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் நம்மூர்காரர்கள் ஓய்வு நேரத்தில் இந்த சேனலில் வரும் வீடியோவை பார்த்து சமைத்து பார்க்கின்றார்கள். இலங்கை தமிழர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் வீடியோக்களில் இதுவும் உள்ளது.பூர்வீகம் கோவை கருமத்தம்பட்டி. நான் சின்ன வயசா இருக்கும் போதே அப்பா இறந்துட்டாங்க. ஆறாவது படிக்கும்போதே மெரினா பீச்ல சுண்டல் விற்பனை செய்தேன். கூட பிறந்த மூணு தங்கச்சிக்கும் படிக்க வச்சி திருமணம் பண்ணி வைச்சேன்.  ஆரம்பத்துல சின்னதா தள்ளுவண்டி கடை ஆரம்பிச்சேன். அது தான் என்னோட முதல் வெற்றி. சாப்பிட வரக்கூடிய வாடிக்கையாளருக்கு நான் கொடுக்குற சாப்பாட்டோட சுவை புடிச்சு போக இந்த பகுதி முழுக்க பிரபலமானேன். இப்ப சொந்தமா நாலு உணவகம் கோவைல துவங்கி இருக்கேன். ஆரம்பத்துல கருமத்தம்பட்டில ரெஸ்டாரென்ட் ஆரம்பிச்சேன். அந்த சமயத்துல பக்கத்துல இருக்குற ஆசிரமத்து குழந்தைகளுக்கும் சேர்த்து சமைப்பேன். என்னோட கடைக்கு வாடிக்கையாளரா வந்தவர் தான் நண்பர் சம்பத்கான். இப்போ அவர் இல்லாம நான் இல்லை. அவர் கம்யூட்டர் சென்டர் வச்சுருந்தாரு. நானும் அவரும் சேந்துதான் ஆசிரமத்திற்கு சாப்பாடு செஞ்சு கொடுத்துட்டு இருந்தோம். அப்படிதான் ஒருமுறை தோனுச்சி ‘இதெல்லாம் வீடியோ வா எடுத்து யூடியூப்ல போடலாம்’ னு. அப்படி ஆரம்பிச்சது தான் இந்த சேனல்” என்கிறார் சிவகண்ணன்.‘‘கடந்த மூணு வருசமா தொடர்ந்து இந்த சேனலுக்காக நானும் அவரும் வேலை பாத்துட்டு இருக்கோம். நிறைய இடங்கள்ல போய் நிறைய விதவிதமா சமைச்சு இருக்கோம். சமீபத்தில் இலங்கை போய் அங்க நம்ம பாரம்பரிய உணவு வகைகளை சமைச்சு தந்தோம். அந்த ஊர் உணவுகளை இங்க அறிமுகபடுத்திட்டு வரோம். சேனல் ஆரம்பிச்ச ஒரு ரெண்டு வருஷம் ரொம்ப சிரமபட்டோம். ‘டாடி ஆறுமுகம்’ தான் இன்ஸ்ப்ரேஷன்.  என்னதான் விதவிதமா சமைச்சாலும் ஆசிரம குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும்போது தான் மனநிறைவே கிடைக்குது’’ என்கிறார் சம்பத்கான். தொகுப்பு :விவேக்

The post தள்ளுவண்டி டூ ரெஸ்டாரென்ட் appeared first on Dinakaran.

Related Stories: