ஆர்எக்ஸ் பதிலாக ஸ்ரீஹரி மருந்து சீட்டை இந்தியில் எழுதிய மபி அரசு டாக்டர்: வலைதளத்தில் வைரல்

சத்னா: மத்திய பிரதேச மாநிலத்தில் நாட்டிலேயே முதல் முறையாக இந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் படிப்பிற்கான புத்தகங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் வெளியிட்டார். இதுதொடர்பான விழாவில் பேசிய மபி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ‘மருத்துவர்கள் மருந்து சீட்டை இந்தியில் எழுத வேண்டும். மருந்து சீட்டில் மருத்துவர்கள் வழக்கமாக எழுதும் ஆர்எக்ஸ் (மருத்துவம் என்பதற்கான லத்தீன் வார்த்தை) என்பதை ‘ஸ்ரீஹரி’ என எழுதலாம்’ என்றார். மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தின் கோடார் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர் சர்வேஷ் சிங், வயிற்று வலிக்கான வந்த நோயாளிக்கு முழுக்க முழுக்க இந்தியிலேயே மருந்து சீட்டை எழுதி தந்துள்ளார். முதல்வர் சவுகான் கூறியபடி, ஆர்எக்ஸ் என்பதற்கு பதில் ஸ்ரீஹரி எனவும் எழுதி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.* ‘பாதிப்பை ஏற்படுத்தும்’இந்தி வழி எம்பிபிஎஸ் படிப்பு திட்டம் குறித்து, இந்திய மருத்துவ அகாடமியின் முதன்மை ஆய்வாளரும், நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் கூறுகையில், ‘‘இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. தமிழ்நாடு, கேரளா என தென் மாநில மாணவர்கள் இந்தியில் சரளமான பேச்சுத்திறன் கொண்டிருக்க மாட்டார்கள். இவர்களுக்கு இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தும். இது மருத்துவ துறையில் இந்தியாவை 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றிடும்’’ என்றார்….

The post ஆர்எக்ஸ் பதிலாக ஸ்ரீஹரி மருந்து சீட்டை இந்தியில் எழுதிய மபி அரசு டாக்டர்: வலைதளத்தில் வைரல் appeared first on Dinakaran.

Related Stories: