3 படங்களில் பிஸியாகும் சூப்பர் ஸ்டார்

பேட்ட படத்தில் புதுடிரெண்டுக்கு மாறிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்றிருக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறார்.  

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு பிறகு ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டிலேயே தொடங்கப்பட உள்ளதாம். இதையடுத்து வினோத் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருக்கிறார் ரஜினி. மேலும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படமொன்றிலும் நடிக்க தலை அசைத்திருக்கிறார்.  2019, 2020 என 2 வருட கால்ஷீட்டை இப்போதே ரஜினி கமிட் செய்து வைத்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

× RELATED 19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்