சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்க இயக்குனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படம் ‘சர்கார்’. சென்ற ஆண்டு வெளியானது. கள்ள ஓட்டு போடுவதை எதிர்த்து மறுவாக்கு பதிவு செய்வதற்கான தேர்தல் கமிஷனின் 49P விதி இப்படத்தின் மூலம் பலருக்கு தெரிய வந்தது. வரும் 18ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையரின் டுவிட்டர் பக்கத்தில் 49P குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.