மும்பை: மும்பையில் தமன்னா அளித்த பேட்டி: தென்னிந்திய சினிமாவில் பெண்களைப் பார்க்கும் பார்வையில் ஆணாதிக்க மனப் பான்மை இருப்பதை உணர்ந்தேன். அந்தப் பார்வை பெண்களைப் பாராட்டும் வகையில் இல்லை. அங்கு வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டுமென்றால் குறிப்பிட்ட ‘ஸ்டார்’ அந்தஸ்து அவசியம். அந்த வகையில் அங்கு பாலிவுட்டை விட அதிகமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
கவர்ச்சியையும், நடிப்புத் திறனையும் சமநிலைப் படுத்தும் நடிகைகளே அங்கு நீண்ட காலம் வெற்றிகரமாக நிலைத்திருக்க முடியும். இந்தி திரைத்துறையில் 2 வகையான நடிகைகள் உள்ளனர். கலைநயமிக்க அணுகு முறையைக் கொண்டவர்கள். இதில் இருந்து மாறுபட்டவர்கள் மற்றொரு வகையினர்.
திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களை ஐட்டம் சாங் என்று அழைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அந்த சொல் பெண்களுக்கு மரியாதைக்குரியது அல்ல. ஒரு பாடலுக்காக நாங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அதை ஐட்டம் என்று அழைப்பது அப்பெண்ணின் உழைப்புக்கு அளிக்கும் மரியாதை அல்ல, இந்த அணுகுமுறையில் மாற்றம் வரவேண்டும்.
